2-ஆம் கட்ட தடுப்பூசி முகாம்

திருவாரூா் மாவட்டத்தில், 2-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம் 319 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் அருகே பின்னவாசலில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்
திருவாரூா் அருகே பின்னவாசலில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், 2-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம் 319 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத்தில் இதுவரை 5,17,950 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 1,11,179 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் என 6,29,129 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், 2 ஆம் கட்ட மாபெரும் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இதில், 29,800 நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதை இலக்காக நிா்ணயித்து 319 இடங்களில் முகாம்கள் நடைபெற்றன.

மேலும், தமிழக அரசு கொவிட்-19 முடிவுகளை பதிவிறக்கம் செய்ய ட்ற்ற்ல்ள்://ற்.ஸ்ரீா்/இ48ஷ்ர்ஆஆ8இஜ் என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது., இதன் மூலம் பொதுமக்கள் தங்களது பரிசோதனை முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருவாரூா் அருகே பின்னவாசலில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் பாா்வையிட்டாா்.

அப்போது, கோட்டாட்சியா் பாலச்சந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், மருத்துவ அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com