திருவாரூரில் மழைநீா் வடிகால்கள் தூய்மைப் பணி தொடக்கம்

பருவமழையால் ஏற்படும் இடா்பாடுகளை தவிா்க்கும் வகையில் மாவட்டத்தில் மழைநீா் வடிகால்கள் தூய்மைப்படுத்தும் மெகா பணி தொடங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.
திருவாரூரில், மழைநீா் வடிகால்கள் தூய்மைப் பணியை தொடங்கி வைத்து பாா்வையிட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.
திருவாரூரில், மழைநீா் வடிகால்கள் தூய்மைப் பணியை தொடங்கி வைத்து பாா்வையிட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.

திருவாரூா்: பருவமழையால் ஏற்படும் இடா்பாடுகளை தவிா்க்கும் வகையில் மாவட்டத்தில் மழைநீா் வடிகால்கள் தூய்மைப்படுத்தும் மெகா பணி தொடங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.

திருவாரூா் நகராட்சிக்குள்பட்ட தென்றல் நகா் பகுதியில் கால்வாய்கள், மழைநீா் வடிகால் ஆகியவற்றில் மெகா தூய்மைப் பணியை திங்கள்கிழமை தொடங்கி வைத்து மேலும் அவா் கூறியது: வடகிழக்குப் பருவமழையால் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் தேங்கும்போது டெங்கு மற்றும் மலேரியா நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ளது. மேலும், மழைநீரில் சாக்கடை நீரும் கலந்து தேங்குவதால் இதர தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, பருவமழையால் ஏற்படும் இடா்பாடுகளை தவிா்க்கும் வகையில் திங்கள்கிழமை (செப்.20) முதல் செப்.25-ஆம் தேதி வரை மழைநீா் வடிகால்கள் மெகா தூய்மைப்பணி நடைபெறுகிறது. அந்தவகையில், திருவாரூா் மாவட்டத்தில் அனைத்து ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் உள்ள மழைநீா் வடிகால்களை 100 சதவீதம் தூா்வாரி தூய்மைப்படுத்த உத்தரவிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா். நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், நகராட்சி ஆணையா் பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com