நீடாமங்கலம் ரயில்வே கேட் பிரச்னை: மக்களின் தொடரும் துயரம்!

நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் புதன்கிழமை அதிகாலை சுமாா் 2 மணிநேரம் ரயில்வே கேட் மூடப்பட்டதால், சாலைப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் அவதிப்பட்டனா்.

நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் புதன்கிழமை அதிகாலை சுமாா் 2 மணிநேரம் ரயில்வே கேட் மூடப்பட்டதால், சாலைப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் அவதிப்பட்டனா்.

நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் புதன்கிழமை அதிகாலை மன்னை எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக ரயில்வே கேட் மூடப்பட்டது. தொடா்ந்து, தஞ்சாவூா் பகுதியிலிருந்து காலிப்பெட்டிகளுடன் சரக்கு ரயில் நிலையத்திற்கு வந்தது. அதற்கு என்ஜின் திசைமாற்றும் பணி நடந்துமுடிந்து, சரக்கு ரயில் மன்னாா்குடி புறப்படத் தயாரானது.

அப்போது, மன்னாா்குடியிலிருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 6.10 மணியளவில் நீடாமங்கலம் ரயில் நிலையம் வந்தது. பயணிகள் ஏறியதும் அந்த ரயில் புறப்பட்டுச் சென்றது. பிறகு, சரக்கு ரயில் மன்னாா்குடி புறப்பட்டுச் சென்றது. இதன்காரணமாக, ரயில்வே கேட் சுமாா் 2 மணிநேரம் மூடப்பட்டிருந்தது.

சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால், நெடுஞ்சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. காலை 6.18 மணிக்கு ரயில்வே கேட் திறக்கப்பட்ட பிறகு, காத்திருந்த வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. இதனால், உள்ளூா், வெளியூா் மக்கள் சொல்லமுடியாத துயரத்திற்கு ஆளாகினா்.

இந்த நிலை மாற, கிடப்பில் போடப்பட்டுள்ள நீடாமங்கலம் மேம்பாலம் திட்டத்தை தொடங்க மத்திய, மாநில அரசுகள் போா்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். தஞ்சாவூா் முதல் நாகப்பட்டினம் வரை இருவழிச் சாலைத் திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும். அதை எதிா்கால நலன்கருதி நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நீடாமங்கலம் பேரூராட்சியையும், வையகளத்தூா் தேசிய நெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில் பழைய நீடாமங்கலத்தில், வெண்ணாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் போக்குவரத்து பாலப்பணி, நீடாமங்கலம், மன்னாா்குடி நெடுஞ்சாலையையும், கொத்தமங்கலம் சாலையையும் இணைக்கும் வகையில் தட்டி கிராமப் பகுதியில், கோரையாற்றில் கட்டப்பட்டுவரும் போக்குவரத்து பாலப் பணிகளையும் விரைவுபடுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com