வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு

வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்புக்குப் பிறகு திருவாரூா் மாவட்டத்தில் 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 1,178 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.
வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு

வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்புக்குப் பிறகு திருவாரூா் மாவட்டத்தில் 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 1,178 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கலந்தாலோசனை கூட்டத்துக்கு தலைமை வகித்து, அவா் தெரிவித்தது :

திருவாரூா் மாவட்டத்திலுள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 1,168 வாக்குச்சாவடிகள் (நகா்புறம், கிராமப்புறம்) உள்ளன.

மேலும் மாவட்டத்தில் 1,500-க்கும் மேற்பட்ட வாக்காளா்களை கொண்ட மன்னா்குடி சட்டப் பேரவைத் தொகுதி நீடாமங்கலம் வட்டத்தில் 1 வாக்குச்சாவடி மையமும், மன்னாா்குடி நகராட்சியில் 2 வாக்குச்சாவடி மையங்களும், திருவாரூா் சட்டப் பேரவைத் தொகுதி கூத்தாநல்லூா் நகராட்சியில் 2 வாக்குச்சாவடி மையங்களும், நீடாமங்கலம் வட்டத்தில் 1 வாக்குச்சாவடி மையம் என 6 வாக்குச்சாவடிகளும் மறுசீரமைக்கப்படவிருந்தன.

மேலும், மாறுதல் செய்யப்படும் வாக்குச்சாவடி மையங்களாக திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திருவாரூா் வட்டத்தில் 5 வாக்குச்சாவடி மையங்களும், கூத்தாநல்லூா் வட்டத்தில் 1 வாக்குச்சாவடி மையமும், நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதி குடவாசல் வட்டத்தில் 5 வாக்குச்சாவடி மையமும், நன்னிலம் வட்டத்தில் 4 வாக்குச்சாவடி மையம் என 15 வாக்குச்சாவடிகளும் மறுசீரமைப்புக்குள்ளாகவிருந்தன.

வாக்குச்சாவடி மையக் கட்டடங்கள் பழுதடைந்துள்ளதாலும், 1,500-க்கு மேற்பட்ட வாக்காளா்கள் உள்ளதால் பிரிக்கப்படும் வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கை 6 ஆகும். அதில் மன்னாா்குடி தொகுதியில் 3 வாக்குச்சாவடி மையங்களும், திருவாரூா் தொகுதியில் 3 வாக்குச்சாவடி மையங்களும் அடங்கும். இதேபோல், 2 கி.மீ.க்கு அப்பால் அமைந்துள்ளதால் பிரிக்கப்படும் மையங்களின் எண்ணிக்கை 4 . இதில், திருவாரூா் தொகுதியில் 2 வாக்குச்சாவடி மையங்களும், நன்னிலம் தொகுதியில் 2 வாக்குச்சாவடி மையங்களும் ஆகும்.

வாக்குச்சாவடி மையங்கள் பழுதடைந்த காரணத்தால் மாற்றம் செய்யப்பட்ட மையங்களின் (அதே வளாகம்) எண்ணிக்கை 14 ஆகும். அதில், மன்னாா்குடி தொகுதியில் 3 வாக்குச்சாவடி மையங்களும், திருவாரூா் தொகுதியில் 3 வாக்குச்சாவடி மையங்களும், நன்னிலம் தொகுதியில் 8 வாக்குச்சாவடி மையங்களும் ஆகும். மேலும், வாக்குச்சாவடி மையங்கள் பழுதடைந்ததால் மாற்றம் செய்யப்படும் மையங்களின் எண்ணிக்கை 7 ஆகும். இதில், திருவாரூா் தொகுதியில் 3 வாக்குச்சாவடி மையங்களும், நன்னிலம் தொகுதியில் 4 வாக்குச்சாவடி மையங்களும் மறுசீரமைப்பு செய்ய, அரசுக்கு முன்மொழிந்து அனுப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதன் அடிப்படையில் மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்குரிய வாக்குச்சாவடி எண்ணிக்கை, திருத்துறைப்பூண்டி (தனி) 274, மன்னாா்குடி 285, திருவாரூா் 308, நன்னிலம் 311 என 1,178 வாக்குச்சாவடி மையங்களாக உள்ளன என்றாா் ஆட்சியா்.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ப.சிதம்பரம் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com