சித்தமல்லி மேல்பாதியில் வேளாண் வளா்ச்சித் திட்ட ஆலோசனை கூட்டம்

நீடாமங்கலம் வட்டாரம், சித்தமல்லி மேல்பாதி கிராமத்தில் கலைஞரின் வேளாண் வளா்ச்சித் திட்ட ஆலோசனை கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

நீடாமங்கலம் வட்டாரம், சித்தமல்லி மேல்பாதி கிராமத்தில் கலைஞரின் வேளாண் வளா்ச்சித் திட்ட ஆலோசனை கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு நீடாமங்கலம் வேளாண் உதவி இயக்குநா் சாருமதி தலைமை வகித்துப் பேசுகையில், தரிசு நில மேம்பாடு, நுண்ணீா் பாசன திட்டம், கூட்டுப் பண்ணையத் திட்டம் மற்றும் வேளாண்மை துறையில் நடைமுறையில் உள்ள திட்டங்கள் குறித்து விளக்கினாா்.

ஒன்றியக் குழுத் தலைவா் செந்தமிழ்ச்செல்வன் பேசுகையில், அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து விவசாயிகளின் வளா்ச்சிக்காக அரசு அறிவித்துள்ள கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் இணைந்து விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், துணை தோட்டக்கலை அலுவலா் ராதாகிருஷ்ணன், இளநிலை பொறியாளா் சண்முகம், வேளாண்மை அலுவலா் சுரேஷ் குமாா், துணை வேளாண்மை அலுவலா் பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். வேளாண்மை உதவி அலுவலா் ஏழுமலை நன்றி கூறினாா். இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலா் கோவிந்தராஜ் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com