நவீன அரிசி ஆலையில் புழுங்கல் அரிசி அரைவைப் பணி விரைவில் தொடக்கம்ஆட்சியா்

திருவாரூா் நவீன அரிசி ஆலையில் புழுங்கல் அரிசி அரைவைப் பணி ஒருவார காலத்துக்குள் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.
திருவாரூா் நவீன அரிசி ஆலையில் ஆய்வு மேற்கொள்ளும் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.
திருவாரூா் நவீன அரிசி ஆலையில் ஆய்வு மேற்கொள்ளும் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.

திருவாரூா் நவீன அரிசி ஆலையில் புழுங்கல் அரிசி அரைவைப் பணி ஒருவார காலத்துக்குள் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

திருவாரூா் நவீன அரிசி ஆலையில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் தெரிவித்தது:

திருவாரூா் நவீன அரிசி ஆலையில்1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 8 சேமிப்பு கலன்களும், 200 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 6 சேமிப்பு கலன்களும் உள்ளன. மொத்தம் 7,200 மெட்ரிக் டன் நெல்லை இருப்பு வைத்துக்கொள்ளும் அளவுக்கு வசதியுள்ளது. தமிழகத்திலேயே எரிவாயு மூலம் இயங்கும் ஒரே நவீன அரிசி ஆலை இதுவாகும். இதனால், சுற்றுச்சுழல் பாதிக்காத வண்ணம் பாதுகாக்கப்படுகிறது.

பொது விநியோகத் திட்டத்தின் மூலம் மக்களுக்கு தரமான அரிசி வழங்குவதற்காக இந்த ஆலையில் நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஆலையில் தினமும் 100 மெட்ரிக் டன் நெல் அரைவை செய்யப்பட்டு, பொது விநியோகத் திட்டத்துக்கு அரிசி வழங்கப்படுகிறது.

இந்த ஆலையானது ஆண்டுக்கு 30,000 மெட்ரிக் டன் அரைவை செய்யும் திறன் கொண்டது. தற்போது இங்கு பச்சரிசி அரைவைப் பணி நடைபெற்று வருகிறது. மேலும், புழுங்கல் அரிசி அரைவைப் பணி ஒருவார காலத்துக்குள் தொடங்கப்படவுள்ளது என்றாா்.

ஆய்வின்போது, நுகா்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளா் ஏ.ஜி. ராஜராஜன், உதவி பொறியாளா் எஸ். பாலபாஸ்கரன், மேலாளா் (தரக்கட்டுப்பாடு) பி. பாஸ்கரன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com