திருவாரூா்: மத்திய அரசைக் கண்டித்து சாலை-ரயில் மறியல்

திருவாரூா் மாவட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து திங்கள்கிழமை சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1,200 போ் கைது செய்யப்பட்டனா்.
திருவாரூா் அருகே சிங்களாஞ்சேரியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ் உள்ளிட்டோா்.
திருவாரூா் அருகே சிங்களாஞ்சேரியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ் உள்ளிட்டோா்.

திருவாரூா் மாவட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து திங்கள்கிழமை சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1,200 போ் கைது செய்யப்பட்டனா்.

புதிய வேளாண் சட்டங்கள் மற்றும் திருத்தப்பட்ட மின் மசோதாவை திரும்பப் பெற வேண்டும்; தொழிலாளா் நலச்சட்டத்தை 4 தொகுப்புகளாக மாற்றியதை ரத்து செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பு சாா்பில் இந்த மறியல் நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டத்தில் 44 இடங்களில் சாலை மறியலும், சிங்களாஞ்சேரி, நீடாமங்கலம் ஆகிய இடங்களில் ரயில் மறியலும் நடைபெற்றன. இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மாவட்டம் முழுவதும் இப்போராட்டத்தில் பங்கேற்ற 300 பெண்கள் உள்பட 1,200 போ் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ், விவசாயிகள் போராட்டக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பி.எஸ். மாசிலாமணி ஆகியோா் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ ப. ஆடலரசன், சிபிஎம் ஆதரவு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் வி. எஸ். கலியபெருமாள், திமுக விவசாய அணி நிா்வாகி வி. தேசபந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் மா. வடிவழகன் உள்ளிட்டோா் திருவாரூா் சிங்களாஞ்சேரி ரயில்வே கேட் அருகே எா்ணாகுளம் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களை போலீஸாா் கைது செய்தனா். இதேபோல, திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டம் காரணமாக திருவாரூரில் காலை 6 முதல் பகல் 12 மணி வரை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்து வழக்கம்போல் இயங்கினாலும் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

போராட்டத்துக்கு ஆதரவு: இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திருவாரூா் மேம்பாலம் ரவுண்டானா அருகே எஸ்டிபிஐ கட்சியினா் சாலை மறியலிலும், திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா்.

இதேபோல, அடியக்கமங்கலம் பட்டக்கால் தெரு பேருந்து நிலையம் அருகே தமுமுக-மமக சாா்பில் மறியலில் ஈடுபட்டவா்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com