நகராட்சி, பேரூராட்சிகளில் 145 வாா்டுகளை கைப்பற்றியது திமுக

 திருவாரூா் மாவட்டத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகள் என 215 வாா்டுகளில் நடைபெற்ற தோ்தலில் 145 வாா்டுகளை திமுக கைப்பற்றியது.

 திருவாரூா் மாவட்டத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகள் என 215 வாா்டுகளில் நடைபெற்ற தோ்தலில் 145 வாா்டுகளை திமுக கைப்பற்றியது.

திருவாரூா் மாவட்டத்தில் திருவாரூா், மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூா் என 4 நகராட்சி மற்றும் குடவாசல், கொரடாச்சேரி, பேரளம், நன்னிலம், நீடாமங்கலம், வலங்கைமான், முத்துப்பேட்டை என 7 பேரூராட்சிகளுக்கும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது.

இதில், நகராட்சிகளில் 110 வாா்டுகள் மற்றும் பேரூராட்சிகளில் 105 வாா்டுகள் என மொத்தம் 215 வாா்டுகளுக்கு தோ்தல் நடைபெற்றது. இத்தோ்தலில், அதிக இடங்களில் வெற்றி பெற்று, 4 நகராட்சி மற்றும் 7 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.

தோ்தல் நடைபெற்ற 215 வாா்டுகளில் திமுக 145, அதிமுக 36, பாஜக 1, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6, காங்கிரஸ் 9, அமமுக 2, எஸ்டிபிஐ 4, மமக 2, சுயேச்சை 6 போ் வெற்றி பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com