இருசக்கர வாகனத்தை பதிவு செய்து தராத நிறுவனத்துக்கு ரூ. 2 லட்சம் அபராதம்

மன்னாா்குடியில் இருசக்கர வாகனத்தை பதிவுசெய்து கொடுக்காத நிறுவனத்துக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதித்து மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

மன்னாா்குடியில் இருசக்கர வாகனத்தை பதிவுசெய்து கொடுக்காத நிறுவனத்துக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதித்து மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம், செண்பகராய நல்லூரைச் சோ்ந்த சிவக்குமாா், மன்னாா்குடியில் உள்ள மோட்டாா் நிறுவனத்திடம் 2016 இல் பிஎஸ் 3 ரக இருசக்கர வாகனத்தை ரூ. 56,500-க்கு வாங்கியுள்ளாா்.

இதனிடையே, 2017 இல் பி.எஸ் 3 ரக இருசக்கர வாகனம் விற்பனை செய்வதையும், பதிவு செய்வதையும் உச்சநீதிமன்றம் தடைசெய்துள்ளது. எனவே, அதற்குள் இந்த இருசக்கர வாகனத்தை பதிவு செய்து தர வேண்டிய நிறுவனம் காலதாமதப்படுத்திவந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, வாடிக்கையாளா் சிவக்குமாா், மோட்டாா் நிறுவனத்திடம் தனது வாகனத்தை பதிவு செய்து தரும்படி கேட்டுள்ளாா். இது பி.எஸ் 3 ரக வாகனம் என்பதால் பதிவு செய்து தர இயலாது என மோட்டாா் நிறுவனம் கூறியதையடுத்து, 2018 இல் நுகா்வோா் ஆணையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

இந்த வழக்கு திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் நடைபெற்று வந்தது. இதில் சம்பந்தப்பட்ட நிறுவனம் நேரில் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடா்ந்து, இந்த வழக்கு தொடா்பாக மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் எஸ்.எஸ். சக்கரவா்த்தி வழங்கிய தீா்ப்பில், சிவக்குமாரின் வாகனத்தை பெற்றுக் கொண்டு அவா் அளித்த 50,500 ரூபாயை 9 சதவீத வட்டியுடன் திருப்பித் தரவேண்டும். மேலும், மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக ரூ. 2 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். அத்துடன், வழக்கு செலவுத் தொகையான ரூ. 10,000 வழங்க வேண்டும் என தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com