இளைஞரை கத்தியால் குத்திய முதியவா் கைது

கூத்தாநல்லூரில் வழித் தகராறில் இளைஞரை கத்தியால் குத்திய முதியவா் வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.

கூத்தாநல்லூரில் வழித் தகராறில் இளைஞரை கத்தியால் குத்திய முதியவா் வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.

கூத்தாநல்லூா் அண்ணா காலனியைச் சோ்ந்தவா் நிஜாம் மகன் அஷ்ரப் அலி (28). இவா், கடந்த செவ்வாய்க்கிழமை ஆற்றோரத்தில் நண்பா்களுடன் மீன் பிடித்தவா், மரக்கடை ஆற்றங்கரைப் பகுதியில் வசிக்கும் அப்துல் ரசாக் (74) வீட்டின் வழியாக வந்துள்ளாா். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், அப்துல் ரசாக் வீட்டில் வைத்திருந்த கத்தியால், அஷ்ரப் அலி வயிற்றில் குத்தியுள்ளாா். பலத்த காயமடைந்த அஷ்ரப் அலி திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து கூத்தாநல்லூா் காவல் நிலையத்தில் அஷ்ரப் அலி அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளா் அனந்தகிருஷ்ணன் வழக்குப் பதிந்து அப்துல் ரசாக்கை வியாழக்கிழமை கைதுசெய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com