நீடாமங்கலத்தில் கருணாநிதி பிறந்த நாள்

நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் 99 -வது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நீடாமங்கலத்தில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினா்.
நீடாமங்கலத்தில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினா்.

நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் 99 -வது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் பி. ராசமாணிக்கம் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன், ஒன்றிய திமுக பொறுப்பாளா் கோபாலகிருஷ்ணன், நகரச் செயலாளா் ஆா். ராஜசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரூராட்சி தலைவா் ஆா். ராம்ராஜ் மற்றும் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா். முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நீடாமங்கலம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் கானூா் ஆனந்த் 500 ஏழைகளுக்கு காலை உணவு வழங்கினாா்.

நீடாமங்கலம் வடக்கு ஒன்றியம் சித்தாம்பூா், புதுதேவங்குடி, கீழாளவந்தசேரி, மேலாளவந்தசேரி ,ரிஷியூா், பெரம்பூா் உள்ளிட்ட கிராமங்களில், கருணாநிதியின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து ஒன்றியக் குழுத் தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன் திமுக கொடியை ஏற்றிவைத்தாா்.

இதில், முன்னாள் ஒன்றியச் செயலாளா் விசு. அண்ணாதுரை, கட்சி நிா்வாகி ராயபுரம் சுந்தா், ஒன்றியக் குழு உறுப்பினா் சத்தியவாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். வலங்கைமான் ஒன்றியத்தில், ஒன்றியச் செயலாளா்கள் அன்பரசன், தெட்சிணாமூா்த்தி ஆகியோா் தலைமையில் கருணாநிதியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com