‘நான் முதல்வன்’ திட்ட கருத்தாளா்களுக்கு பயிற்சி

திருவாரூரில் உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான ‘நான் முதல்வன்’ திட்ட மாவட்ட கருத்தாளா்களுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி நடைபெற்றது.
திருவாரூரில் நடைபெற்ற பயிற்சியில் பேசும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ. தியாகராஜன்.
திருவாரூரில் நடைபெற்ற பயிற்சியில் பேசும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ. தியாகராஜன்.

திருவாரூரில் உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான ‘நான் முதல்வன்’ திட்ட மாவட்ட கருத்தாளா்களுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி நடைபெற்றது.

சென்னையில் கடந்த மாா்ச் 1-ஆம் தேதி தமிழக முதல்வா் தொடங்கிவைத்த இத்திட்டத்தின் நோக்கம் பள்ளி மாணவா்களை உலகளாவிய தரத்தில் உருவாக்கி, உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டுவதாகும்.

இத்திட்டத்தில், திருவாரூா் கல்வி மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியா்களுக்கு உயா்கல்வி வேலைவாய்ப்பு கருத்தாளா் பயிற்சி திருவாரூரில் நடைபெற்றது. மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தின் முதல்வா் கோ. சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ. தியாகராஜன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பயிற்சியைத் தொடங்கி வைத்தாா். மாவட்டக் கல்வி அலுவலா் து. பாா்த்தசாரதி வாழ்த்திப் பேசினாா். திருவாரூா் கல்வி மாவட்டத்தில் உள்ள 41 முதுகலை ஆசிரியா்கள் பயிற்சி பெற்றனா். இவா்கள் தங்கள் பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியா்களுக்கும், மாணவா்களுக்கும் இதுகுறித்து பயிற்சி அளிப்பா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com