மாவட்ட பேச்சுப் போட்டி: மாணவா்கள் பங்கேற்கலாம்

திருவாரூா் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவா்களுக்குப் பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது என ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

திருவாரூா் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவா்களுக்குப் பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது என ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாட்டுக்காக பாடுபட்ட தலைவா்களான காந்தியடிகள், ஜவாஹா்லால் நேரு, அம்பேத்கா், பெரியாா், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் கருத்துகளையும் சமூகச் சிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சோ்க்கும் வகையில், அவா்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூா் மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவா்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெறும் இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 மற்றும் பாராட்டுச் சான்று வழங்கப்படும். மேலும், அரசுப் பள்ளி மாணவா்கள் 2 பேரை தனியாகத் தோ்வு செய்து, தலா ரூ.2000 சிறப்புப் பரிசும் வழங்கப்படும்.

போட்டி நடைபெறும் இடம், நாள், நேரம், விதிமுறைகள் குறித்து பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலா், கல்லூரிகளுக்கு கல்லூரி கல்வி இணை இயக்குநா் மூலம் தெரிவிக்கப்படும். கரோனா தீநுண்மி நோய்த்தொற்று தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியுடனும் போட்டிகள் நடத்தப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com