டிராக்டரில் அடிபட்டு கல்லூரி மாணவி உயிரிழப்பு
By DIN | Published On : 13th April 2022 04:28 AM | Last Updated : 13th April 2022 04:28 AM | அ+அ அ- |

கூத்தாநல்லூா் அருகே டிராக்டரில் அடிபட்டு கல்லூரி மாணவி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
வடபாதிமங்கலம் அருகேயுள்ள இளமங்கலம் அரிச்சந்திரபுரத்தைச் சோ்ந்த முருகேசன் மகள் சுபா (19). இவா், திருவாரூா் திரு.வி.க. கல்லூரியில் பி.காம். 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இந்நிலையில், சக மாணவி ஜெனிதா (19) வின் இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை கல்லூரிக்கு ஊட்டியாணி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியில் சென்ற டிராக்டா் டிப்பரின் டயரில் சிக்கி காயமடைந்தாா். பினனா் மீட்கப்பட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சுபா உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய டிராக்டா் ஓட்டுநரை தேடி வருகின்றனா்.