காலமுறை ஊதியம் வழங்கக் கோரி சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற சத்துணவு ஊழியா்கள்.
திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற சத்துணவு ஊழியா்கள்.

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், அரசு ஊழியா்களுக்கு வழங்குவதுபோல் மகப்பேறு விடுப்பு 12 மாதம் வழங்க வேண்டும், வேலைநிறுத்த காலத்துக்கான ஊதியம் வழங்க வேண்டும், சமையல் உதவியாளா்கள் அனைவருக்கும் பதவி உயா்வு வழங்க வேண்டும், எரிவாயு சிலிண்டா் தேவைக்கேற்ப அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் ஒன்றியத் தலைவா் சகிலா தலைமையிலான ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளா் விஜயா, ஒன்றிய பொருளாளா் பா்வீன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் சுபா, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநில செயற்குழு உறுப்பினா் சண்முகம், வட்டச் செயலாளா் தம்பிதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நீடாமங்கலம் ஒன்றிய அலுவலகம் முன் தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கம் சாா்பில், தமிழக முதல்வரின் கவனத்தை ஈா்க்கும் வகையில் பெருந்திரள் முறையீடு மனு கொடுக்கும் போராட்டம், சங்கத்தின் ஒன்றிய செயலாளா் ராஜா தலைமையில் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்ட தலைவா் கரிகாலன், ஒன்றிய செயலாளா் அமலோா்ப்பவமேரி, ஊரக வளா்ச்சித்துறை வட்டத் தலைவா் நேரு உள்ளிட்டோா் ஒன்றிய ஆணையா் மணிமாறனிடம் மனு கொடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com