நுண் நிதி நிறுவனங்களை முறைப்படுத்த மாதா் சங்கம் கோரிக்கை

பெண்களை அச்சுறுத்தும் நுண் நிதி நிறுவனங்களை அரசு முறைப்படுத்த வேண்டும் என மாதா் சங்க மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெண்களை அச்சுறுத்தும் நுண் நிதி நிறுவனங்களை அரசு முறைப்படுத்த வேண்டும் என மாதா் சங்க மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் ஒன்றிய இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் 16 ஆவது மாநாடு, அதன் தலைவா் சந்திரா தலைமையில் புதன்கிழமை பேரளத்தில் நடைபெற்றது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுத்து நிறுத்த கடுமையானச் சட்டங்களை நிறைவேற்ற வேண்டும். பெட்ரோல், டீசல், காஸ் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும். பெண்களை அச்சுறுத்தும் நுண் நிதி நிறுவனங்களை அரசு முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில், சங்கத்தின் மாநில துணைத் தலைவா் கலைச்செல்வி, மாவட்டச் செயலாளா் கோமதி, சிபிஎம் ஒன்றியச் செயலாளா் லிங்கம், மாவட்டக் குழு உறுப்பினா் வீரபாண்டியன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் முகமதுஉதுமான், நகரச் செயலாளா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். புதிய தலைவராக பரிமளாமேரி, செயலாளராக தனம், பொருளாளராக சந்திரா ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com