மன்னார்குடியில் விவசாயிகளுடன் தமிழக முதல்வர் காணொலி வாயிலாக கலந்துரையாடும் நிகழ்ச்சி

கடந்த 10 ஆண்டுகளாக விண்ணப்பித்து காத்திருந்து மின் இணைப்பு பெற்ற ஒரு லட்சம் விவசாயிகளுடன் காணொலி காட்சி வாயிலாக
மன்னார்குடியில் விவசாயிகளுடன் தமிழக முதல்வர் காணொலி வாயிலாக கலந்துரையாடும் நிகழ்ச்சி

மன்னார்குடி: கடந்த 10 ஆண்டுகளாக விண்ணப்பித்து காத்திருந்து மின் இணைப்பு பெற்ற ஒரு லட்சம் விவசாயிகளுடன் காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் தமிழக அரசின் ஆணைப்படி, ஓராண்டில் ஒரு லட்சம்  விவசாய மின் இணைப்பு கொடுக்கப்பட்டதை முன்னிட்டு சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில், சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு விவசாயப் பணிக்காக மின் இணைப்பு வழங்கப்பட்டிருப்பதை பற்றியும், ஆட்சி பொறுப்பேற்று ஒரு ஆண்டில் திமுக ஆட்சியில் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் அரசு அறிவித்துள்ள திட்டங்கள், சலுகைகள் பற்றியும் விளக்கம் அளித்து உரையாற்றினார். 


இதுப்போன்ற காணொலி கூட்டம் தமிழ்நாடு முழுவதும் 202 இடங்களில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, திருவாருர் மாவட்டத்தில் திருவாருர் மற்றும் மன்னார்குடி என இரண்டு இடங்களில் நடைபெற்றது.

மன்னார்குடி கோட்டம் சார்பில் காணொலி கூட்டம் மன்னார்குடி அருகேயுள்ள இடையர்நத்தம் ஏ.ஆர்.ஜெ.பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. கூட்ட அரங்கில் பெரிய அளவிலான எல்இடி திரை அமைக்கப்பட்டு அதில், சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சி மற்றும் முதல்வரின் உரை ஆகியவை காணொலி காட்சியாக ஒளிபரப்பட்டது.

மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் கே.மாரிமுத்து ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்.

இதில், மன்னார்குடி கோட்டத்தில் விவசாய மின் இணைப்பு பெற்ற 505 பேர் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். 

மின் இணைப்பு பெற்ற அனைவருக்கும் மின் இணைப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. இவ்விழாவில், மன்னார்குடி நகர் மன்ற தலைவர் த.சோழராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மன்னார்குடி செயற் பொறியாளர் மு.சுப்ரமணியன் தலைமையில், உதவி செயற் பொறியாளர்கள் சா.சம்பத், அ.செங்குட்டுவன், ஆ.மதியழகன், ப.ஆனந்த், திருவாரூர் உதவிப் பொறியாளர் பாலாஜி மற்றும் மன்னார்குடி கோட்ட பிரிவுப் பொறியாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com