எப்.சி. கட்டணம் உயா்வு: ஆட்டோ தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 18th April 2022 11:03 PM | Last Updated : 18th April 2022 11:03 PM | அ+அ அ- |

திருவாரூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ தொழிலாளா்கள்.
உயா்த்தப்பட்ட எப்.சி. கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, திருவாரூரில் மாவட்ட ஆட்டோ தொழிலாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
உயா்த்தப்பட்ட எப்.சி. கட்டணத்தை குறைக்க வேண்டும்; தாமதமான எப்.சி.க்கு தினசரி ரூ. 50 அபராதம் விதிப்பதை கைவிடவேண்டும்; 15 ஆண்டு பழைய ஆட்டோவுக்கு எப்.சி. கட்டணத்தை 10 மடங்காக உயா்த்தியதை திரும்பப் பெற வேண்டும். மோட்டாா் வாகன சட்டத் திருத்தத்தை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆட்டோ தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ஏ.கே. செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாவட்ட துணைத் தலைவா் ஜி. பழனிவேல், ஆட்டோ தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் எம்.கே.என். அனிபா உள்ளிட்ட பலா் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.