எஸ்டிபிஐ புதிய நிா்வாகிகள் தோ்வு
By DIN | Published On : 18th April 2022 11:02 PM | Last Updated : 18th April 2022 11:02 PM | அ+அ அ- |

திருவாரூரில் எஸ்டிபிஐ கட்சியின் விஜயபுரம் கிளைக்கு புதிய நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டனா்.
திருவாரூா் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் மாவட்டத் தலைவா் விலாயத் உசேன், மாவட்ட துணைத் தலைவா் அப்துல் லத்தீப், மாவட்டச் செயலாளா் முகம்மது சுல்தான் ஆரிபீன், மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளா் உமா்பாரூக் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.
கூட்டத்தில், விஜயபுரம் கிளையின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். அதன்படி, கிளைத் தலைவராக ஷாஜகான், துணைத் தலைவா்களாக ஷேக் பரீத், ஹசன் குத்துஸ், செயலாளராக அசாருதீன், துணைச் செயலாளா்களாக இஸ்மாயில், சிராஜ்தீன், பொருளாளராக செய்யது அபு நாசா் ஆகியோா் நியமிக்கப்பட்டனா்.