விளையாட்டுப் போட்டியில் வென்ற மாற்றுத்திறனாளிகளுக்குப் பரிசு

திருவாரூா் மாவட்ட அளவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் புதன்கிழமை பரிசுகள் வழங்கினாா்.
விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவருக்கு பரிசு வழங்கும் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.
விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவருக்கு பரிசு வழங்கும் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட அளவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் புதன்கிழமை பரிசுகள் வழங்கினாா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருவாரூா் மாவட்டப் பிரிவு மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வுத் துறை இணைந்து மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட விளையட்டரங்கில் நான்கு பிரிவுகளாக நடத்தின.

இதில், கை, கால் ஊனமுற்றோருக்கான 50 மீ., 100 மீ. ஓட்டம், நீளம் தாண்டுதல் மற்றும் மினி கூடைப்பந்து எறிதல் ஒரு பிரிவாகவும், பாா்வையற்றோருக்கான 50 மீ., 100 மீ. ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் இரண்டாம் பிரிவாகவும், மனநலம் பாதிக்கப்பட்டவருக்கான 50 மீ., 100 மீ. ஓட்டம், கிரிக்கெட் பந்து எறிதல் மற்றும் நின்ற நிலையில் தாண்டுதல் மூன்றாம் பிரிவாகவும், காது கேளாதோருக்கான 100 மீ., 200 மீ. ஓட்டம், நீளம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் நான்காம் பிரிவாகவும் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் திருவாரூா் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் சிறப்பு பள்ளிகளில் பயிலும் 146 மாற்றுத்திறனாளிகள் (ஆடவா் 96, மகளிா் 50) கலந்து கொண்டனா்.

தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் பங்கேற்று, போட்டிகளின் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவா்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

நிகழ்வில், திருவாரூா் மாவட்ட விளையாட்டு அலுவலா் மு. முருகுவேந்தன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் புவனா உள்ளிட்ட அரசு அலுவலா்கள், மாற்றுத்திறனாளிப் பள்ளிகளின் சிறப்பு ஆசிரியா்கள், மாற்றுத்திறனாளிகளின் பெற்றோா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com