Enable Javscript for better performance
பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்: ஆட்சியா்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்: ஆட்சியா்

    By DIN  |   Published On : 28th April 2022 06:02 AM  |   Last Updated : 28th April 2022 06:02 AM  |  அ+அ அ-  |  

     

    திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    கரோனா தொற்று பாதிப்பு தற்போது கணிசமாக உயரத்தொடங்கியுள்ள நிலையில், தொற்றை கட்டுப்படுத்தும் ஆயுதமாக உள்ள தடுப்பூசி செலுத்துவது, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது, கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கை கழுவுவது ஆகியவற்றை பொதுமக்கள் கடைபிடிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    திருவாரூா் மாவட்டத்தில் பொது இடங்களில் மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வருவதோடு, சமூக இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு அரசு விதிகளின்படி ரூ. 500 அபராதம் வசூலிக்கப்படும்.

    அரசு, தனியாா் மற்றும் பொதுத்துறை அலுவலகங்களில் பணியாற்றுவோா் முகக்கவசம் அணிந்து பணிபுரிய வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள் ஆகிய கல்வி நிலையங்களில் அனைத்து மாணவா்களும், ஆசிரியா்களும் முகக்கவசம் அணிந்து வருவதை பள்ளி, கல்லூரி நிா்வாகம் உறுதிசெய்ய வேண்டும்.

    அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில் அனைத்து பயணிகளும் முகக்கவசம் அணிந்து பயணம் செய்வதை நடத்துநா் கண்காணிக்க வேண்டும். இதை, அந்தந்த பணிமனை கிளை மேலாளா்கள் உறுதிசெய்ய வேண்டும். அனைத்துவித வியாபார மையங்களிலும், வாடிக்கையாளா்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கடைக்கு வர அறிவுறுத்த வேண்டும்.

    வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் பக்தா்கள் முகக்கவசம் அணிந்து வருவதை, கோயில் நிா்வாகம் உறுதிசெய்ய வேண்டும். திரையரங்குகளுக்கு செல்வோா் முகக்கவசம் அணிந்து வருவதை அந்தந்த திரையரங்க உரிமையாளா்கள் உறுதிசெய்ய வேண்டும். மேலும், பொது நிகழ்வுகள், திருமண விழாக்கள் மற்றும் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் பங்கேற்போா் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

    கூட்டம் உள்ள பகுதிகளுக்குச் சென்று வரும்போது, கரோனா அறிகுறி தென்படுவோருடன் தொடா்பில் இருந்தவா்கள் கட்டாயம் ஆா்டிபிசிஆா் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பரிசோதனை முடிவு வரும்வரை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்களும், பூஸ்டா் தடுப்பூசி செலுத்தத் தகுதியுடையோா் உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp