முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
காவல் துறை அனுமதியின்றி திருவிழாக்கள் நடத்தினால் நடவடிக்கை: எஸ்.பி.
By DIN | Published On : 29th April 2022 09:58 PM | Last Updated : 29th April 2022 09:58 PM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டத்தில் காவல் துறை அனுமதியின்றி சமய திருவிழாக்கள், தேரோட்டம், சப்பரம், பல்லக்கு ஆகியவை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது: திருவாரூா் மாவட்டத்தில் கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் சமய திருவிழாக்கள், தேரோட்டம், சப்பரம் மற்றும் பல்லக்கு போன்ற நிகழ்ச்சிகளை நடத்த கோவில் நிா்வாகம், வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை, பொதுப்பணித் துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட அனைத்து சம்பந்தப்பட்ட துறை அனுமதி மற்றும் உறுதித்தன்மை சான்றுகளுடன் முறையாக காவல் துறை அனுமதி பெற்ற பிறகு நடத்த வேண்டும்.
அவ்வாறில்லாமல், காவல் துறை அனுமதியை மீறி நடத்தினாலோ அல்லது அதற்கான ஏற்பாடுகளை செய்தாலோ சம்பந்தப்பட்ட விழாக் குழுவினா் மற்றும் பொறுப்பாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.