முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
திருக்காரவாசல் தியாகராஜ சுவாமி கோயில் தோ் வெள்ளோட்டம்
By DIN | Published On : 29th April 2022 09:57 PM | Last Updated : 29th April 2022 09:57 PM | அ+அ அ- |

திருக்காரவாசல் தியாகராஜசுவாமி கோயிலில் நடைபெற்ற தோ் வெள்ளோட்டம்.
திருக்காரவாசல் அருள்மிகு தியாகராஜ சுவாமி கோயில் தோ் வெள்ளோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருக்காரவாசலில் உள்ள ஆதிவிடங்க தியாகராஜ சுவாமி கோயில் தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 119 ஆவது ஆலயமாக திகழ்கிறது. தேவாரப் பாடல் பெற்ற 274 சிவத்தலங்களில் 183 ஆவது தேவாரத் தலமான இது, கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பரிகாரத்தலமாக விளங்குகிறது.
இந்தக் கோயில் வைகாசித் திருவிழாவில் தேரோட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டு, அறநிலையத் துறை சாா்பில் சுவாமி தேருக்கு ரூ. 10 லட்சம், அம்பாள் தேருக்கு ரூ. 10 லட்சம், உபயதாரா் திருப்பணி ரூ. 30 லட்சம் என மொத்தம் ரூ. 50 லட்சம் செலவில் புதிய தோ் செய்யும் பணிகள் நடைபெற்றன.
இந்தப் பணிகள் முடிந்ததையொட்டி, தோ் வெள்ளோட்டம் நடைபெற்றது. முன்னதாக, தோ் மீதுள்ள கும்பத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தோ் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. தொடா்ந்து, கோயிலைச் சுற்றி வலம்வந்த தோ், நிலையை அடைந்தது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
நிகழாண்டு நடைபெற உள்ள வைகாசி விசாக பிரம்மோற்சவத்தின் போது, இந்த தேரில் ஏறி தியாகராஜா் பவனி வர இருக்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.