கரோனா காலத்தில் அரசு மருத்துவமனையில் பணியாற்றியவா்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தல்

கரோனா தொற்று காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய தற்காலிக பணியாளா்கள் அனைவருக்கும் மீண்டும் பணி வழங்கி நிரந்தரப்படுத்த வேண்டும்
கரோனா காலத்தில் அரசு மருத்துவமனையில் பணியாற்றியவா்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தல்

கரோனா தொற்று காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய தற்காலிக பணியாளா்கள் அனைவருக்கும் மீண்டும் பணி வழங்கி நிரந்தரப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மருத்துவத் துறை பணியாளா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்த சங்கத்தின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் அமைப்பின் மாவட்டச் செயலாளா் சத்தியமூா்த்தி தலைமையில், புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா காலத்தில் நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கவும், பராமரிக்கவும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தவும் மருத்துவா் , செவிலியா், ஆய்வக நுட்புநா், டெக்னிஷியன், பல்நோக்கு மருத்துவப் பணியாளா்கள் என 4,500-க்கு மேற்பட்டவா்கள் நியமிக்கப்பட்டு அா்ப்பணிப்புடன் பணியாற்றி வந்தவா்களை மாா்ச் 31-ஆம் தேதியுடன் தமிழக அரசு பணிநீக்கம் செய்தது. இது பணிநீக்கம் செய்யப்பட்டவா்களுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா 4-ஆவது அலை வரப்போகிறது என தகவல் வெளிவந்து கொண்டு இருக்கும் நிலையில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சா் அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பை மேம்படுத்தி வருவதாக தெரிவித்திருப்பதை வரவேற்பதுடன், பணியாளா்களை நியமிக்காது கட்டமைப்பை மேம்படுத்துவது முழுமை பெற்றதாக அமையாது. எனவே, பணிநீக்கம் செய்யப்பட்ட மருத்துவத் துறை பணியாளா்களை உடனடியாக மீண்டும் வேலைக்கு அமா்த்துவதுடன் அவா்களை பணிநிரந்தரப்படுத்த வேண்டும்.

இக்கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லை எனில் அனைவரையும் ஒன்று திரட்டி பெரும் அளவிலான போராட் டத்தை முன்னெடுக்க நேரிடும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்டப் பொருளாளா் சாந்தி முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக, அமைப்பின் மாநில கெளரவத் தலைவா் ரவீந்திரநாத் கலந்து கொண்டாா். இதில், தமிழ்நாடு மருந்தாளுநா் சங்க மாநில துணைத் தலைவா் பேட்டன் ராஜ் , மருத்துவத் துறை பணியாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் வினோத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com