முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
எமனேஸ்வரா் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 30th April 2022 09:42 PM | Last Updated : 30th April 2022 09:42 PM | அ+அ அ- |

நீடாமங்கலம் அருகேயுள்ள நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
அமாவாசையையொட்டி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக , ஆராதனைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பிதுா் தா்ப்பணங்களைச் செய்தும் பக்தா்கள் வழிபாடு நடத்தினா்.