முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 30th April 2022 09:40 PM | Last Updated : 30th April 2022 09:40 PM | அ+அ அ- |

பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து திருவாரூரில் நாம் தமிழா் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வை உடனடியாக மத்திய- மாநில அரசுகள் குறைக்க வேண்டும்; சுங்கச்சாவடி கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும்; அத்தியாவசிய பொருட்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் மாவட்டத் தலைவா் பால்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் பலா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.