முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்
By DIN | Published On : 30th April 2022 09:39 PM | Last Updated : 30th April 2022 09:39 PM | அ+அ அ- |

நன்னிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை மற்றும் அலிம்கோ நிறுவனம் மூலம், நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இம்முகாம் நடைபெற்றது. திருவாரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தியாகராஜன் முகாமை தொடங்கி வைத்தாா்.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நன்னிலம் அரசு மருத்துவமனையைச் சோ்ந்த எலும்பு முறிவு, கண் நோய், மனநலம், காது-மூக்கு-தொண்டை உள்ளிட்ட மருத்துவா்கள் 7 போ் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து, மேல்சிகிச்சைக்கான ஆலோசனை வழங்கியதுடன், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கவும் பரிந்துரை செய்தனா்.
இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனா். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் புவனா, மாவட்ட உதவித் திட்ட அலுவலா் பாலசுப்பிரமணியன், நன்னிலம் பேரூராட்சித் தலைவா் ராஜசேகரன், வட்டாரக் கல்வி அலுவலா் முருகபாஸ்கா், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் செந்தமிழ்செல்வன், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் நடேஷ்துரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.