கூத்தாநல்லூர் பெரிய பள்ளி வாயில் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பெரிய பள்ளி வாயில்  நிர்வாகக் குழுவுக்கு நடைபெற்ற தேர்தலில், 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
கூத்தாநல்லூர் பெரிய பள்ளி வாயில் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பெரிய பள்ளி வாயில்  நிர்வாகக் குழுவுக்கு நடைபெற்ற தேர்தலில், 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

கூத்தாநல்லூர் பெரிய பள்ளி வாசல் ஜமாஅத் நிர்வாகக் குழுவுக்கு தேர்தல் நடத்த தமிழ்நாடு வக்பு வாரியம் ஆணையிட்டது. ஆணையின்படி, தஞ்சாவூர் சரக வக்பு வாரிய கண்காணிப்பாளரும், தேர்தல் அதிகாரியுமான டி.ஓ.பி. தாரிக் தேர்தலை நடத்த உத்தரவிட்டார். அதன்படி, ஜூலை 19 ஆம் தேதி, பெரிய பள்ளிவாசல், பரக்கதுல்லாஹாலில் வேட்பு மனுத்தாக்கல்  தொடங்கியது. 

இந்தத் தேர்தலில், பெரிய பள்ளிவாசலின் நிர்வாகிகளான , தலைவர் என்.எம்.ஏ.சிஹாபுதீன், செயலாளர் ஜே.எம்.ஏ.ஷேக் அப்துல் காதர், எல்.பீ.மைதீன் உள்ளிட்ட 7 பேர் மீண்டும் போட்டியிட்டார்கள். 24 பேர் புதியவர்கள் என 31 பேர் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்து, இருவர் திரும்பப் பெற்றதால், 29 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். ஜமாஅத் புதிய நிர்வாகிகளுக்காக நடத்தப்பட்ட தேர்தலில், 4289 வாக்காளர்களுக்கும், 4 பூத்துகளாகப் பிரிக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கப்பட்டு, மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. 

அதைத் தொடர்ந்து, மாலை தொழுகைக்குப் பிறகு, தமிழ்நாடு வக்பு வாரிய உதவி செயலாளரும், மேற்பார்வையாளருமான எஸ்.வசீர் அகமது லப்பை மேற்பார்வையில் வாக்குகள் எண்ணத் தொடங்கப்பட்டு, இரவு 9.45 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 15 பேர் தேவைப்படும் ஜமாஅத் நிர்வாகக் குழுவுக்கு, 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில், 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பூத் 1 ல் 379, பூத் 2 ல் 367, பூத் 3 ல் 364 மற்றும் பூத் 4 ல் 333 என மொத்தம் 1443 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில், 31 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. 

வக்பு வாரிய கண்காணிப்பாளரும், தேர்தல் அதிகாரியுமான டி.ஓ.பி. தாதிக்,வெற்றி பெற்றவர்களை அறிவித்தார்.வெற்றி பெற்ற 15 வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள். டி.எம்.அய்.அப்துல் சலாம் 1033, எஸ்.எஸ்.ஹாஜா நஜ்முதீன் 935, எம்.அக்பர் அலி 926, நா.அ. அன்சார்தீன் 864, என்.என்.ஹாஜா பகுர்தீன் 863, முஹம்மது ஜெபுருல்லாஹ் 835, கே.எம்.ஹாஜி முஹம்மது 760, எஸ்.அப்துல் முகம்மது 740, முஹம்மது இக்பால் தீன் 737, பி.எஸ்.ரஹ்மத்துல்லாஹ் 716, ஏ.எஸ்.முகம்மது ஆரிபு 714, எல்.பீ.முகம்மது முகையதீன் 679, கே.ஏ.அப்துல் அஜீஸ் 658, எம்.ஏ.முஹம்மது சலீம் 637, என்.எம்.ஏ.சிஹாபுதீன் 610 என வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். 

இவர்களில், மீண்டும் போட்டியிட்ட 7 பேரில், தலைவர் என்.எம்.ஏ.சிஹாபுதீன் மற்றும் எல்.பி. முகம்மது முகையதீன் ஆகிய இருவர் மட்டுமே மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். செயலாளர் ஜே.எம்.ஏ.ஷேக் அப்துல் காதர் உள்ளிட்ட 5 பேரும் வெற்றி வாய்ப்பை இழந்தனர். தேர்தலுக்கானப் பணிகளை, வக்பு வாரிய கண்காணிப்பாளர் எஸ்.காதர் செரீப், வக்பு வாரிய தலைமை அலுவலர் ஆயிஷா, பூத் பார்வையாளர் முகம்மது சபிபுல்லா மற்றும் வக்பு வாரிய ஆய்வாளர் ம.சாதிக் பாட்சா உள்ளிட்டோர் கவனித்தனர். 

வெற்றியாளர்களை, உறவினர்களும், நண்பர்களும் முழக்கமிட்டு, மகிழ்ச்சியுடன் ஒருவரையொருவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகக் குழு தேர்தலில் போட்டியிட 31 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

வாக்கு எண்ணிக்கையில் 31 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. மேலும், போட்டியிட்ட 29 வேட்பாளர்கள் மீதும், ஒரு வாக்காளர் முத்திரை பதித்து, செல்லாத வாக்கை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com