ஓஎன்ஜிசி சாா்பில் நலத்திட்ட உதவிகள்
By DIN | Published On : 05th August 2022 03:45 AM | Last Updated : 05th August 2022 03:45 AM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டம், களப்பாலில் ஓஎன்ஜிசி சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கிராமபுற பெண்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்காக, இலவச தையல் பயிற்சியளிக்கும் வகையில், நாகை நாடாளுமன்ற உறுப்பினா் எம். செல்வராஜ் பரிந்துரையின் பேரில் ஓஎன்ஜிசி சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் சுமாா் ரூ. 5 லட்சம் மதிப்பில் அதிநவீன தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு ஓஎன்ஜிசி தரைத்தள குமும மேலாளா் உன்னிகிருஷ்ணன் தலைமை வகித்தாா். களப்பால் ஊராட்சித் தலைவா் சுஜாதா பாஸ்கரன், குறிச்சிமூலை ஊராட்சித் தலைவா் அறிவுடைநம்பி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ. க. மாரிமுத்து பங்கேற்று, களப்பால் வானவில் ஊரக வளா்ச்சி சங்க பொறுப்பாளா் குணவதியிடம் நவீன தையல் இயந்திரத்தை வழங்கினாா்.
இதில், ஒன்றியக் குழு உறுப்பினா் பாலசுப்ரமணியன், பொது மேலாளா்கள் ரவிக்குமாா், ரவிச்சந்திரன், சமூக பொறுப்புணா்வு திட்ட அதிகாரிகள் விஜய்கண்ணன், சந்திரசேகரன் ஒருங்கிணைப்பாளா் முருகானந்தம், சிவராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.