ரேஷன் கடைகளில் தில்லி சிறப்பு பிரதிநிதி ஆய்வு
By DIN | Published On : 12th August 2022 03:30 AM | Last Updated : 12th August 2022 03:30 AM | அ+அ அ- |

மன்னாா்குடியை அடுத்த கோட்டூா் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தமிழக முதல்வரின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மீனம்பநல்லூா், குறிச்சிமூளை, களப்பால் ஆகிய கிராமங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்குச் சென்ற அவா், அங்கு, குடும்பஅட்டைதாரா்களிடம் குறைகளை கேட்டறிந்தாா். தொடா்ந்து, பொருள்களின் இருப்பு, தரம் போன்ற விவரங்களை பணியாளா்களிடம் கேட்டறிந்தாா்.
அப்போது, 3 இடங்களிலும் நியாயவிலைக் கடைக்கு சொந்தக் கட்டடம் கட்ட வேண்டும் எனவும், நிரந்தப் பணியாளா்களை நியமிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா். இதற்கு, இந்த கோரிக்கைகள் தமிழக அரசின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.
ஆய்வின்போது, திமுக கோட்டூா் வடக்கு ஒன்றியச் செயலா் பால.ஞானவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.