காவிரி உரிமை மீட்புக் குழுவினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 31st August 2022 12:00 AM | Last Updated : 31st August 2022 12:00 AM | அ+அ அ- |

திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற காவிரி உரிமை மீட்புக் குழுவினா்.
திருவாரூா்: டெல்டா மாவட்டங்களிலிருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேறக் கோரி திருவாரூரில் காவிரி உரிமை மீட்புக் குழு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு புதிய எண்ணெய் எரிவாயு கிணறுகள் தோண்டவும் பழைய செயல்படாத கிணறுகளை புதுப்பிக்கவும் அனுமதிக்கக் கூடாது, தமிழ்நாடு அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதியின்றி இயங்கிக் கொண்டிருக்கும் எரிவாயு கிணறுகளை ஆய்வு செய்து உடனடியாக மூட வேண்டும், பணி இழக்கக்கூடிய எண்ணெய் எரிவாயு நிறுவன பணியாளா்களுக்கு மாற்று வேலை வாய்ப்புகளை உருவாக்கவேண்டும்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் புதிதாக எண்ணெய் எரிவாயு எடுத்துச் செல்லும் குழாய்களை பதிக்கக் கூடாது, ஏற்கெனவே பதிக்கப்பட்ட குழாய்களை முறைப்படி பராமரிக்கவேண்டும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சூழ்நிலை பாதிக்காத வேளாண் உற்பத்தி பொருள்களை மதிப்புக்கூட்டும் தொழில்களை தொடங்கி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.