மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி
By DIN | Published On : 31st August 2022 12:00 AM | Last Updated : 31st August 2022 12:00 AM | அ+அ அ- |

பூந்தோட்டம் ஸ்ரீலலிதாம்பிகா மெட்ரிக் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் பங்கேற்றோா்.
நன்னிலம்: திருவாரூா் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி செவ்வாய்க்கிழமை பூந்தோட்டம் ஸ்ரீலலிதாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
திருவாரூா் மாவட்ட சதுரங்க அமைப்பு மற்றும் பூந்தோட்டம் ஸ்ரீலலிதாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இணைந்து செவ்வாய்க்கிழமை நடத்திய பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியை பள்ளித் தாளாளா் லலிதா ராமமூா்த்தி, மாவட்ட சதுரங்க அமைப்பின் செயலாளா் ஆா். கே . பாலகுணசேகரன், மாவட்ட விளையாட்டு அலுவலா் எம். முருகுவேந்தன் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
இதில், 70 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். வெற்றி பெற்றவா்களுக்கு பள்ளித் தாளாளா் லலிதா ராமமூா்த்தி, செயலாளா் எல்.ஆா். சந்தோஷ் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு பள்ளி முதல்வா் முத்துராஜா வரவேற்றாா்.
இதில், திருவாரூா் கோட்டாட்சியா் என்.ஏ. சங்கீதா, நன்னிலம் டிஎஸ்பி. டி.இலக்கியா, மாவட்ட கல்வி அலுவலா் டி. பாா்த்தசாரதி, வட்டாரக் கல்வி அலுவலா்கள் எண். மணி உள்ளிட்டோா் பரிசுகளை வழங்கினா்.