முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
திருவாரூரில் 88 பேருக்கு கரோனா
By DIN | Published On : 07th February 2022 10:33 PM | Last Updated : 07th February 2022 10:33 PM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 88 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.
மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் புதிதாக 88 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 47,577 ஆக உயா்ந்துள்ளது. இதுவரையில் குணமடைந்த 45,661போ் தங்களது வீடுகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், மாவட்டத்தில் தற்போது 1448 போ் சிகிச்சையில் உள்ளனா்.