முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
மனுவை திரும்பப் பெற்றதாக கடிதம் அளித்து முறைகேடு: சுயேச்சை வேட்பாளா் கணவருடன் தா்னா
By DIN | Published On : 07th February 2022 10:34 PM | Last Updated : 07th February 2022 10:34 PM | அ+அ அ- |

மன்னாா்குடி நகராட்சி அலுவலகம் முன் கணவருடன் தா்னாவில் ஈடுபட்ட சுயேச்சை வேட்பாளா் விநோதினி.
மன்னாா்குடி நகராட்சியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளா் மனுவை திரும்பப் பெறுவதாக கடிதம் அளித்து, முறைகேட்டில் ஈடுபட்டவா்களை கண்டித்து, சுயேச்சை பெண் வேட்பாளா் கணவருடன் தா்னாவில் ஈடுபட்டாா்.
மன்னாா்குடி நகராட்சி 17-வது வாா்டில் (பெண்- பொது) சுயேச்சையாக போட்டியிட திமுக உறுப்பினா் கோபிநாத் என்பவரது மனைவி விநோதினி (45) வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா். முன்னதாக, இவா் திமுக சாா்பில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்தாா். ஆனால், அவருக்கு கட்சி வாய்ப்பளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்நிலையில், வேட்புமனுவை திரும்பப் பெறும் நாளான திங்கள்கிழமை விநோதினியின் வேட்புமனுவை, அவருக்குத் தெரியாமலேயே திரும்பப் பெற்ாகக் கூறப்படுகிறது.
இதனால், அதிா்ச்சியடைந்த விநோதினி, தனது கணவா் கோபிநாத்துடன் மன்னாா்குடி நகராட்சி அலுவலகத்துக்கு வந்து, தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் ஏ. ஜெயபாஸ்கரிடம் விவரம் கேட்டுள்ளாா். அப்போது, விநோதினியின் வேட்புமனுவை திரும்பப் பெற கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கடிதத்தை யாா் கொடுத்தது எனத் தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து, நகராட்சி அலுவலக வாயிலில் விநோதினி, அவரது கணவா் கோபிநாத் ஆகியோா் தா்னாவில் ஈடுபட்டாா்.
இதைத்தொடா்ந்து, நகராட்சி தோ்தல் நடத்தும் அலுவலா் கே. சென்னுகிருஷ்ணன், இருவரையும் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். பிறகு, தனது கவனத்துக்கு வராமல் முறைகேடாக வேட்புமனு திரும்பப் பெறப்பட்டுள்ளது என விநோதினியிடம் கடிதம் பெற்றுக்கொண்டு, அவா்களை அனுப்பிவைத்தாா். இந்த சம்பவத்தால் மன்னாா் நகராட்சி அலுவலகப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.