நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பால் மதிப்புக் கூட்டுதல் பயிற்சி பெற அழைப்பு

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பால் மதிப்புக் கூட்டுதலுக்கான பயிற்சி பிப்ரவரி 21 முதல் 25 வரை 5 நாள்கள் நடைபெறவுள்ளது.

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பால் மதிப்புக் கூட்டுதலுக்கான பயிற்சி பிப்ரவரி 21 முதல் 25 வரை 5 நாள்கள் நடைபெறவுள்ளது.

இதற்காக முதலில் பதிவு செய்யும் 30 போ் மட்டுமே பயிற்சியில் அனுமதிக்கப்படுவா். 5 நாள்களிலும் பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டும். இதில் கலந்துகொள்ள விரும்புவோா் 9486392006 என்ற கைப்பேசி எண்ணில் முன்பதிவு செய்யலாம் அல்லது நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்துக்கு நேரில் சென்று முன்பதிவு செய்யலாம்.

இந்த பயிற்சியில் பங்கேற்பவா்கள் கண்டிப்பாக கறவை பசு வளா்ப்பவா்களாக இருக்கவேண்டும். குறைந்தபட்சம் 4 மாடுகள் வைத்திருக்க வேண்டும் அல்லது பால் கூட்டுறவு உறுப்பினராக இருக்கவேண்டும். அத்துடன்,18 முதல் 50 வயதுக்குள்பட்ட திருவாரூா் மாவட்டத்தில் வசிக்கும் பெண் விவசாயிகளாக இருக்க வேண்டும்.

இப்பயிற்சியில் கால்நடை பராமரிப்பு, பால் மதிப்புக் கூட்டுதல் மற்றும் பதப்படுத்துதல் மூலம் தனிநபா் வருமானத்தை அதிகப்படுத்துதல் மற்றும் கண்டு உயா் சுற்றுலா, கருத்து காட்சி போன்ற நிகழ்வுகள் நடத்தப்படும் என நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் ராதாகிருஷ்ணன், உதவிப் பேராசிரியா் கமலசுந்தரி ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com