மன்னாா்குடி: வேட்புமனு வாபஸ் நாளில் திமுக- இந்திய கம்யூ. இடையே உடன்பாடு

திமுக ஒரு வாா்டிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 வாா்டுகளிலும் வேட்புமனுக்களை திங்கள்கிழமை திரும்பப் பெற்றன.

மன்னாா்குடி நகராட்சி வாா்டுகளில் திமுகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தனித்தனியே வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையே கடைசி நேரத்தில் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதால், திமுக ஒரு வாா்டிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 வாா்டுகளிலும் வேட்புமனுக்களை திங்கள்கிழமை திரும்பப் பெற்றன.

மன்னாா்குடி நகராட்சியில் 33 வாா்டுகள் உள்ளன. இதில் போட்டியிட திமுக கூட்டணியில் மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்வியடைந்ததால், திமுக சாா்பில் 33 வாா்டுகளிலும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டன.

இதேபோல, திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வாா்டு எண் 3, 6, 27, 30, 33 ஆகிய 5 வாா்டுகளில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ், சிபிஎம், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட இக்கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில், திமுக- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே மீண்டும் வாா்டுகள் ஒதுக்கீடு குறித்து பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு, திங்கள்கிழமை உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாா்டு எண் 6 ஒதுக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, 6- வது வாா்டில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்திருந்த திமுக வேட்பாளரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் 6-வது வாா்டை தவிர 3, 27, 30, 33 ஆகிய வாா்டுகளில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தவா்களும் தங்களது மனுக்களை திரும்பப் பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com