மன்னார்குடியில் காலை 11 மணி நிலவரப்படி 25. 21% வாக்குப்பதிவு

மன்னார்குடியில் காலை 11 மணி நிலவரப்படி 25. 21% வாக்குகள் பதிவாகியுள்ளன.  
மன்னார்குடி நகராட்சி மாதிரி நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு வந்த அந்தப் பள்ளியன் முன்னாள் மாணவி முகமுதா பீவி (95) தனது வாக்கினை பதிவு செய்தார்.
மன்னார்குடி நகராட்சி மாதிரி நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு வந்த அந்தப் பள்ளியன் முன்னாள் மாணவி முகமுதா பீவி (95) தனது வாக்கினை பதிவு செய்தார்.

மன்னார்குடியில் காலை 11 மணி நிலவரப்படி 25. 21% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

திருவாருர் மாவட்டம், மன்னார்குடி நகராட்சிக்கு உள்பட்ட 33 வார்டுகளுக்கு உறுப்பினர்கள் தேர்வுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு நகராட்சிக்கு உள்பட்ட 67 வாக்குப்பதிவு மையங்களிலும் தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கி முதல் ஒரு மணி நேரம் வாக்குச்சாவடிகளில் மிக குறைந்த எண்ணிக்கையில் வாக்காளர்கள் இருந்தனர். 8 மணிக்கு பிறகு பல வாக்குச் சாவடிகளில் ஆண்களை காட்டிலும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். சில வாக்குச் சாவடிகளில் 9 மணிக்கு பிறகும் மிக மெத்தனமான வாக்குப் பதிவு இருந்தது.

10 மணிக்கும் ஒவ்வொரு மையத்தில் ஆண்கள் வரிசையில் குறைந்த எண்ணிக்கையிலும் ஒரு சிலர் மையங்களில் ஒற்றை இலக்கத்திலும் ஆண்கள் வரிசையில் நின்றனர். 

ஆனால், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நீண்ட வரிசையில் சில மணி நேரம் காத்திருந்து வாக்கினைப் பதிவு செய்தனர்.மன்னார்குடி காந்தி சாலையில் உள்ள நாகராட்சி மாதிரி நடுநிலைப் பள்ளிக்கு வந்த அந்த பள்ளியின் முன்னாள் மாணவி எஸ்.எம்.முகமுதா பீவி (95) சக்கர நாற்காலியில் வந்தும், இதே போன்று, கீழப்பாலம் தென்வடல் 6 ஆம் தெரு உள்ள வாக்குச்சாவடிக்கு ஆர்.பி.சிவம் நகரைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (80) சக்கர நாற்காலியில், மனைவி மற்றும் குடும்பத்திரனருடன் வந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.


 
பின்லே மேல்நிலைப் பள்ளியில், புதுத்தெடு ஸ்ரீ பாரதி வித்யாலயா உயர் நிலைப் பள்ளி வாக்குச்சாவடிகளில் தலா ஒரு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திடீர் பழுது காரணமாக சிறிது நேரம் வாக்குப் பதிவு தடைப்பட்டது. பின்னர், பொறியாளர்கள் அந்த மையங்களுக்கு விரைந்து வந்து பழுதினை சரி செய்தனர். காலை 11 மணி நிலவரப்படி 25. 21 சதவீதம் வாக்குக்கள் பதிவாகியுள்ளன. 33 வார்டுகளில் ஒரு சில சம்பவங்களை தவிர மற்றப்படி வாக்குப்பதிவு மிக அமைதியாக நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com