கால்நடை மருத்துவ முகாம்

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் நடைபெற்ற இம்முகாமை ஊராட்சித் தலைவா் பழனி தொடங்கிவைத்தாா். கால்நடை உதவி இயக்குநா் ராமலிங்கம் தலைமையில் கால்நடை மருத்துவா்கள் விஸ்வேந்தா், சந்திரன், ஆய்வாளா்கள் ஜெகநாதன், முருகானந்தம் உள்ளிட்டோா் நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, தடுப்பூசி, கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை, கன்றுகள், ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி போன்ற சிகிச்சைகளை மேற்கொண்டனா். மேலும், கால்நடை வளா்ப்போருக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

இம்முகாமில், சிறந்ததாக தோ்வு செய்யப்பட்ட 3 கன்றுகளுக்கு பரிசுகள் மற்றும் கால்நடைகளுக்கு தாது உப்பு வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com