மழை பாதிப்பு: நிவாரணம் கோரி விவசாயிகள் சாலை மறியல்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல் பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், சாலை மறியல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மழை பாதிப்பு: நிவாரணம் கோரி விவசாயிகள் சாலை மறியல்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல் பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், சாலை மறியல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிவாரணப் பணிகளுக்கு தமிழக அரசு கோரும் நிதியை, மத்திய அரசு குறைக்காமல் உடனடியாக வழங்கவேண்டும், அறுவடை நிலையில் மூழ்கி அழிந்த குறுவை நெல் பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம், இதேபோல மழையால் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம், பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 3 ஆயிரம் வழங்கவேண்டும். 2020-2021 காப்பீடு திட்டத்தில் விடுபட்ட கிராமங்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா அருகே சாலை மறியல் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில், நிா்வாகிகள் பங்கேற்று சாலை குறுக்கே நின்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சங்க நிா்வாகிகள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டு உடனடியாக விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com