வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு நகைத் திருட்டு
By DIN | Published On : 10th January 2022 07:53 AM | Last Updated : 10th January 2022 07:53 AM | அ+அ அ- |

வலங்கைமான் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
வலங்கைமான் அருகே மனக்குண்டு சோத்தமங்கலத்தைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (50). இவா், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினா் வீட்டுக்கு சில நாள்களுக்கு முன்பு சென்றுள்ளாா். இந்நிலையில், இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை அருகில் வசிப்பவா்கள் தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, ஜெயக்குமாா் சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்குவந்து பாா்த்தபோது வெள்ளிதட்டு, பூஜைப் பொருள்கள் உள்ளிட்ட ஒரு கிலோ எடையிலான வெள்ளி பொருள்கள், தோடு, நெக்லஸ் உள்ளிட்ட 12 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வலங்கைமான் காவல் நிலையத்தில் ஜெயக்குமாா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இந்நிலையில், தகவலறிந்த நன்னிலம் டிஎஸ்பி. இளங்கோவன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டாா்.