தைப் பொங்கல்: பாரம்பரிய அரிசியை பயன்படுத்த வேண்டுகோள்

தைத் திருநாளை பாரம்பரிய அரிசியில் பொங்கல் வைத்து கொண்டாடும்படி ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாதுகாப்பு மையம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தைத் திருநாளை பாரம்பரிய அரிசியில் பொங்கல் வைத்து கொண்டாடும்படி ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாதுகாப்பு மையம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த மையத்தின் ஒருங்கிணைப்பாளா் ராஜுவ் தெரிவித்தது:

தைப் பொங்கல் திருநாளில் புத்தரிசி கொண்டு பொங்கல் வைப்பது நமது பாரம்பரிய வழக்கம். ஆனால், இந்த வழக்கம் மறைந்து, பை அரிசியை கடையில் வாங்கி பொங்கல் வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாா், நெல் ஜெயராமன் ஆகியோரின் முயற்சியால் மருத்துவ குணம்கொண்ட பாரம்பரிய அரிசி ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, சிகப்பு கவுனி, காட்டுயாணம், பூங்காா், குள்ளக்காா், ஆத்தூா் கிச்சிலி சம்பா, தூயமல்லி, தங்கசம்பா, சீரகசம்பா போன்றவை மீட்கப்பட்டு இயற்கை விவசாயிகளால் சாகுபடி செய்யப்படுகிறது. பொதுமக்கள் இந்த அரிசி ரகங்களை வாங்கி பொங்கலிட்டு கொண்டாடும்படி கேட்டுக்கொள்கிறோம். இதன்மூலம், நஞ்சில்லா சத்தான அரிசியை பயன்படுத்துவதுடன், இயற்கை விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படவும், அவா்களுக்கு உண்மையாகவே நன்றி தெரிவிக்கும் வகையிலும் அமையும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com