நீடாமங்கலம், வலங்கைமானில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா

நீடாமங்கலம்,வலங்கைமானில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா திங்கட்கிழமை  கொண்டாடப்பட்டது.
உதவும் மனங்கள் அமைப்பு சார்பில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா.
உதவும் மனங்கள் அமைப்பு சார்பில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா.

நீடாமங்கலம்: நீடாமங்கலம்,வலங்கைமானில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா திங்கட்கிழமை  கொண்டாடப்பட்டது.

நீடாமங்கலம் உதவும் மனங்கள் அமைப்பு சார்பில் மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின்  105-வது பிறந்தள்  விழா நிறுவனர் எஸ்.எஸ்.குமார்
தலைமையில் நடந்தது.

நகர எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் பெரியதம்பி முன்னிலைவகித்தார்.  சிவகுமரவேல் வரவேற்றார். முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் சா.செந்தமிழ்ச்செல்வன்,  எம்.ஜி.ஆர். திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்தார்.

அதிமுக நகர அவைத்தலைவர் வி.ராமு,நகர  செயலாளர் இ.ஷாஜஹான், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ம.வீரையன், பாஜக ஒன்றிய தலைவர் எல்.ஜெயகுமார், எம்.ஜி.ஆர்.மன்ற ஒன்றிய செயலாளர்  கே.எஸ்.பொன்னுசாமி, ஆலோசகர் நேரு ஆகியோர் பேசினர். முன்களப்பணியாளர்கள் எம்.ஜி.ஆர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். கலாம் மாணவர் மன்ற மாவட்ட தலைவர் ரியாஸ் அகமது நன்றி கூறினார்.

நீடாமங்கலத்தில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்த  நாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு நீடாமங்கலம் மேற்கு   ஒன்றிய செயலாளர் எம்.ஆர். ராஜேந்திரன் தலைமை வகித்தார்.வடக்கு ஒன்றிய செயலாளர் ஆதி.ஜனகர், எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட தலைவர் கோ.அரிகிருஷ்ணன், பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் சா.செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.

இதில் அதிமுகவினர் திரளாக  கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

வலங்கைமான்-

வலங்கைமானில் ஒன்றியக்குழு தலைவர் சங்கர் தலைமையில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நகரசெயலாளர் குணசேகரன், ஒன்றிய செயலாளர் இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு மாலையணிவித்து அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்.
பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com