ரயில்வே துறை தமிழகத்துக்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை: முத்தரசன் குற்றச்சாட்டு

தமிழகத்துக்கு மத்திய ரயில்வே துறை போதுமான நிதி ஒதுக்கீடு செய்வதில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் முத்தரசன் குற்றம்சாட்டினாா்.

தமிழகத்துக்கு மத்திய ரயில்வே துறை போதுமான நிதி ஒதுக்கீடு செய்வதில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் முத்தரசன் குற்றம்சாட்டினாா்.

திருத்துறைப்பூண்டியில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியது:

தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 21 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநரை நேரில் சந்தித்து முதல்வா் மு.க. ஸ்டாலின் வலியுறுத்திய நிலையில், ஆளுநா் எந்த பதிலும் அளிக்கவில்லை. இது ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஒரு நீதி, எதிா்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ஒரு நீதி என கடந்த 8 ஆண்டுகளாக மத்திய அரசு செயல்படுகிறது. இது நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானது.

பல்கலைக்கழகங்களில் ஆளுநரால் நியமிக்கப்படும் துணைவேந்தா்கள் அளவுக்கு மீறி அதிகாரம் செலுத்தும் போக்கு உள்ளது. பெரியாா் பல்கலைக்கழக கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள் அரசியல் ரீதியாக செயல்படக்கூடாது என சுற்றறிக்கை அனுப்பப்பட்டது கண்டனத்திற்குரியது. தலைவா்கள் அனைவரும் மாணவப் பருவத்தில் இருந்துதான் உருவாகிறாா்கள்; மாணவா்கள் அரசியல் பேசக்கூடாது என்பது ஜனநாயக உரிமையை பறிப்பதாகும். இதை அனுமதிக்க முடியாது.

மத்திய ரயில்வே அமைச்சகம் தமிழகத்துக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. தமிழக ரயில்வே திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. காரைக்குடி-சென்னை அகல ரயில்பாதை பணி நிறைவுபெற்றும், சென்னை- காரைக்குடி கம்பன் விரைவு ரயில் இயக்கப்படவில்லை. எா்ணாகுளம்- வேளாங்கண்ணி வாராந்திர ரயிலை, தினசரி ரயிலாக இயக்க வேண்டும். வேளாங்கண்ணி- திருத்துறைப்பூண்டி ரயில் வழித்தடப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். திருத்துறைப்பூண்டி- கோடியக்கரை வழித்தடத்தில் பணிகள் முடிந்தும் இதுவரை ரயில் இயக்கப்படவில்லை. இந்த வழித்தடத்தில் சரக்கு மற்றும் பயணிகள் ரயிலை உடனடியாக இயக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com