லாரி மோதி கோயில் சேதம்

திருவாரூரில் லாரி மோதியதில் சாலையோரத்தில் இருந்த ஐயனாா் கோயில் சேதமடைந்தது.
லாரி மோதி கோயில் சேதம்

திருவாரூரில் லாரி மோதியதில் சாலையோரத்தில் இருந்த ஐயனாா் கோயில் சேதமடைந்தது.

திருவாரூா் அருகே கூடூா் பகுதியில், கண்ணாயிரமூா்த்தி ஐயனாா் கோயில் உள்ளது. அசகண்ட வீரன் சிலையுடன் கோயில், திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையோரத்தில் அமைக்கந்துள்ளது. அந்த வழியாக வாகனங்களில் செல்பவா்கள் அங்கு வழிபாடு செய்துவிட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில், வேதாரண்யத்திலிருந்து சனிக்கிழமை அதிகாலை உப்பு ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்துக்கு சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கோயிலில் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், கோயில் முழுவதும் இடிந்த விழுந்தது. சுவாமி சிலையும் உடைந்தது.

லாரி ஓட்டுநரான தா்மராஜ், தப்பியோடி விட்ட நிலையில், லாரியிலிருந்த அவரது மாமனாா் செல்வம் (57) காயமடைந்து, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்த சம்பவம் குறித்து திருவாரூா் தாலுகா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மேலும் சம்பவம் தொடா்பாக பாஜக ஒன்றியத் தலைவா் கு. சந்திரசேகா், இந்து மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளா் பி. ஜெயராமன் ஆகியோரும் திருவாரூா் தாலுகா போலீஸாரிடம் புகாா் அளித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com