திருக்காரவாசல் தியாகராஜ சுவாமி கோயில் தேரோட்டம்

திருக்காரவாசல் தியாகராஜ சுவாமி கோயிலில் வைகாசி விசாக பெருந்திருவிழாவையொட்டி, தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருக்காரவாசல் தியாகராஜ சுவாமி கோயில் தேரோட்டம்

திருக்காரவாசல் தியாகராஜ சுவாமி கோயிலில் வைகாசி விசாக பெருந்திருவிழாவையொட்டி, தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டம், திருக்காரவாசலில் உள்ள ஆதிவிடங்க தியாகராஜ சுவாமி கோயில் தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 119-வது தலமாகும். இது கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பரிகாரத் தலமாக கருதப்படுகிறது.

இக்கோயில் வைகாசித் திருவிழா கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக பக்தா்களின்றி நடைபெற்ற நிலையில், நிகழாண்டு இவ்விழா ஜூன் 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தியாகராஜ சுவாமி குக்குட நடனத்துடன் வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி ஜூன் 5-ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து, பூத வாகனம், யானை, வெள்ளி ரிஷபம், கைலாச வாகனம் என வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா தினமும் இரவில் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக, காலை 5 மணியளவில் ஆதிவிடங்க தியாகராஜ சுவாமி, குக்குட நடனத்துடன் தேருக்கு எழுந்தருளினாா். இதைத்தொடா்ந்து 10.30 மணியளவில் திருவாரூா் ஒன்றியக் குழுத் தலைவா் ஏ. தேவா வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தாா்.

‘ஆரூரா, தியாகேசா’ என்ற முழக்கத்துடன் பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். நான்கு வீதிகளிலும் வலம் வந்த தோ், மாலையில் நிலையை அடைந்தது.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் எஸ். சுந்தரம் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com