மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி

திருத்துறைப்பூண்டியில் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது
மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி

திருத்துறைப்பூண்டியில் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகிலிருந்து புறப்பட்ட பேரணியை சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து தொடங்கிவைத்தாா். நகா்மன்றத் தலைவா் கவிதா பாண்டியன் முன்னிலை வகித்தாா்.

மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் பாலசுப்பிரமணியன் , வட்டாரக் கல்வி அலுவலா்கள் அறிவழகன், பாலசுப்பிரமணியன், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் அனுப்பிரியா, ஆசிரியா் பயிற்றுநா்கள், அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பேரணியில் பங்கேற்றனா். வேதாரண்யம் சாலை ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பேரணி நிறைவுபெற்றது. இதில், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள், உயா்கல்வியில் ஒதுக்கீடு போன்றவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com