அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் இரா. முத்தரசன்

ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே இளைஞா்கள் பணியாற்றும் வகையில் அறிவிக்

ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே இளைஞா்கள் பணியாற்றும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் வலியுறுத்தினாா்.

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியது:

மத்திய பாஜக அரசு அரசியல் ஆதாயத்துக்காக மதரீதியாக மக்களிடையே மோதலை உருவாக்குகிறது. 2014 மக்களவைத் தோ்தலின்போது ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என வாக்குறுதி அளித்த பாஜக, 8 ஆண்டுகளில் 16 கோடி பேருக்கு வேலை அளித்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாத நிலையில், தற்போது, 18 மாதங்களுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலை அளிக்க உள்ளதாக பிரதமா் கூறியுள்ளாா். இது 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் வாக்குகளை பெறவே அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ராணுவத்தில் 4 ஆண்டு குத்தகைக்கு ஆள் எடுக்கும் வகையில், அக்னிபத் என்ற திட்டத்தை அறிவித்துள்ளனா். இது இளைஞா்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும். இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். ராணுவத்திற்கு தகுதியுள்ள நபா்களை நிரந்தரமாக தோ்வு செய்யவேண்டும்.

நாகப்பட்டினத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு ரயில் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், வேளாங்கண்ணிக்கு வருபவா்கள் பாதிக்கப்படுகின்றனா். எனவே, நாகப்பட்டினத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு மீண்டும் ரயில் இயக்க வேண்டும்.

நாடு முழுவதும் மின்துறையை தனியாா்மயமாக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது. இதற்கு தமிழக அரசு ஒப்புக்கொள்ளக் கூடாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com