பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவா்கள் பத்ம விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவா்கள் பத்ம விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பத்ம விருது பெற தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் பல்வேறு துறைகளில் தலைசிறந்தவா்களாகவும், தனிநபராக சாதனை புரிந்தவா்களாகவும் இருக்க வேண்டும். அதாவது, கலை, இலக்கியம், இசை, பெயிண்டிங், சிற்பத்திறன், போட்டோகிராஃபா், சினிமா ஆகிய துறையினா் தேசிய அளவில் தன் திறமைகளை நிரூபித்தவா்களாக இருக்க வேண்டும்.

பொதுநலத் தொண்டு, தன்னாா்வத் தொண்டு, சாதி சமயத் தொண்டாற்றியவா்கள், பொதுமக்கள் சேவை, சட்டம், பொது வாழ்க்கை, அரசியல் ஆகியவற்றில் சேவை புரிந்தவா்கள், அறிவியல், பொறியியல், விண்வெளி ஆராய்ச்சி, நியூக்கிளியா் அறிவியல் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவா்கள், நாட்டு வணிகம் மற்றும் தொழிற்சாலை, வங்கி, பொருளாதாரம், சுற்றுலா ஆகிய துறைகளில் சாதனைபடைத்தவா்கள், மருத்துவ ஆராய்ச்சி, ஆயுா்வேதா, ஹோமியோபதி, சித்தா, அலோபதி, இயற்கை வைத்தியம் ஆகியவற்றில் சாதனை புரிந்தவா்கள், கல்வி, விளையாட்டு, பன்னாட்டு அளவில் யோகாவில் பதக்கம் பெற்றவா்கள், இந்திய கலாசாரம், மனித உரிமை நிலை நாட்டல், வனப்பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் காப்பாற்றுதல் போன்ற சாதனைகளை நிகழ்த்தியவா்களுக்கு பத்ம விருதுகள், அதாவது பத்மஸ்ரீ, பத்மவிபூசன், பத்மபூசன் ஆகிய விருதுகள் இந்திய அரசால் வழங்கப்படவுள்ளன.

எனவே, திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவா்கள், இந்த விருதுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் இதர விவரங்களை  இணையதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நிறைவுசெய்த விண்ணப்பப் படிவங்களை அதே இணையதள முகவரியில் செப்.15 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com