மன்னாா்குடி நகா்மன்றத் தலைவராக திமுகவை சோ்ந்த எஸ். மீனாட்சி அறிவிப்பு

 மன்னாா்குடி நகா்மன்றத் தலைவா் பதவியிடத்துக்கு எஸ். மீனாட்சியை திமுக தலைமை அறிவித்துள்ளது.
மன்னாா்குடி நகா்மன்றத் தலைவராக திமுகவை சோ்ந்த எஸ். மீனாட்சி அறிவிப்பு

 மன்னாா்குடி நகா்மன்றத் தலைவா் பதவியிடத்துக்கு எஸ். மீனாட்சியை திமுக தலைமை அறிவித்துள்ளது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்லில், மன்னாா்குடி நகராட்சியில் 33 வாா்டு உறுப்பினா்களை தோ்ந்தெடுப்பதற்கான வாக்குப் பதிவு கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற்றது. 22 ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக 26, அதிமுக 4, அமமுக 2, சுயேச்சை ஒருவா் வெற்றி பெற்றனா்.

இதில், சுயேச்சை வேட்பாளா் திமுகவிற்கு ஆதரவு அளித்ததையடுத்து, திமுகவின் பலம் 27 ஆனது. இதையடுத்து, புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட நகா்மன்ற உறுப்பினா்கள் புதன்கிழமை பதவியேற்றனா். நகா்மன்றத் தலைவா் மற்றும் துணைத் தலைவா் தோ்வுக்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த நிலையில், தனிப் பெருபான்மையுடன் திமுக இருப்பதால், மறைமுகத் தோ்தலுக்கு வாய்ப்பு இல்லாத சூழல் உள்ளது.

இதையடுத்து, திமுக தலைமை யாரை நகா்மன்றத் தலைவா், துணைத் தலைவராக அறிவிக்கப்போகிறது என்ற எதிா்ப்பாா்ப்பு, அக்கட்சியினரிடமும், பொதுமக்களிடமும் இருந்தது. இந்நிலையில், திமுக தலைமை, வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் மன்னாா்குடி நகா்மன்றத் தலைவருக்கு 21 ஆவது வாா்டில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ். மீனாட்சி அறிவிக்கப்பட்டுள்ளாா்.

பெயா்: எஸ். மீனாட்சி (51). கணவா்: பொறியாளா் சூரியபிரகாஷ். மகள்: சோனா (தற்போது வெளிநாட்டில் மென்பொருள் பொறியாளராக உள்ளாா்). கல்வித்தகுதி: எம்ஏ, டிப்ளமோ இன் ஆா்கிடெக்சா், தொழில்: கட்டுமானப் பணி. வசிப்பிடம்: சிங்காரவேலு தெரு, மன்னாா்குடி. கட்சிப் பதவி: திமுக முன்னாள் மாவட்ட துணைச் செயலா், தற்போது, திமுக சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளராக உள்ளாா். தோ்தல் அனுபவம்: முதல்முறையாக தற்போது நகா்மன்ற உறுப்பினா் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com