வயலில் தேங்கிய கச்சா எண்ணெய் கழிவு நீர்: ஓஎன்ஜிசி அலுவலகம் முற்றுகை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கோட்டூர் மேலப்பனையூர் ஊராட்சி கமலாபுரத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் கச்சா எண்ணெய் எடுப்பதற்கான ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது.
கமலாபுரத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள், பொதுமக்கள்.
கமலாபுரத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள், பொதுமக்கள்.

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கோட்டூர் மேலப்பனையூர் ஊராட்சி கமலாபுரத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் கச்சா எண்ணெய் எடுப்பதற்கான ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கிணற்றிலிருந்து கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு அதிலிருந்து பிரித்து எடுக்கப்படும் கழிவு நீரை சேமித்து வைக்க சேமிப்பு தொட்டி அமைக்கப்பட்டுள்ளது .

கச்சா எண்ணெய் கழிவு தேங்கியுள்ள வயல்.
கச்சா எண்ணெய் கழிவு தேங்கியுள்ள வயல்.


இந்நிலையில், தொட்டி நிரம்பி கச்சா எண்ணெய் கழிவு நீர் வெளியேறி அருகில் உள்ள உக்கடை கமலாபுரம் சுமித்ரா சேகர் (30) என்பவரது தற்போது சம்பா அறுவடை முடிந்து தரிசாக கிடக்கும் வயலில் வழிந்தோடி வயல் முழுவதும் தேங்கியது.

இதனால், விளை நிலத்தின் மண்ணின் தன்மை பாதிக்கப்பட்டு இன்னும் சில ஆண்டுக்கு நிலத்தில் எந்த பயிரும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்நிலை தொடர்ந்தால் அருகில் உள்ள நூற்றுக்கணக்கான விளை நிலங்களுக்கும் பரவி பயிர் செய்ய முடியாததுடன், நிலத்தடி நீரும் மாசு அடைந்து மக்களும், கால்நடைகளும் பாதிக்கப்படுவதுடன் நோய் தொற்று பரவும் ஆபத்தும் உள்ளது என கூறி உடனடியாக, ஓஎன்ஜிசி நிர்வாகம் நிலத்தடியிலிருந்து எண்ணெய் எடுக்கும் பணியினை நிறுத்திவிட்டு வெளியேற வேண்டும். கச்சா எண்ணெய் கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாய நிலத்தின் உரிமையாளருக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மேலைப்பனையூர் ஊராட்சியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் மேலப்பனையூர் ஓஎன்ஜிசி அலுவலகத்தை, வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இது குறித்து , தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த கோட்டூர் காவல் நிலைய காவலர்கள் மற்றும் ஓஎன்ஜிசி அலுவலர்கள், பகுதி மக்களின் கோரிக்கை குறித்து 12-ம் தேதி சனிக்கிழமை நடைபெறும் பேச்சுவார்த்தையின் மூலம் உரிய தீர்வு எட்டப்படும் என உறுதி அளித்ததன் பேரில் முற்றுகை போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com